கேரளா:பத்தினம்திட்டா அடுத்த பிரக்கணம் பகுதியைச் சார்ந்தவர் அக்கில் கே பாபி. இவர் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி எலந்தூர் பகுதியில் உள்ள ஒரு கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானார்.
விபத்தில் படுகாயம் அடைந்த அக்கில் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி (CMC) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அக்கிலின் வாழ்க்கை முன்பை போல் இல்லாமல் மிகவும் மாற்றம் அடைந்து இருந்தது.
விபத்தில் அக்கில் முதுகெலும்பு உட்பட தனது உடம்பின் முக்கிய பாகங்கள் பாத்திப்பிற்கு உள்ளாகினார். அக்கிலின் இந்த கோரமான விபத்து ஆறாம் ஆண்டு நிறைவடைய சில தினங்களுக்கு முன் நீதிமன்றம் அக்கிலுக்கு அளித்த தீர்ப்பு அவர் இத்தனை ஆண்டுகளாக அனுபவித்த துன்பங்களில் இருந்த சற்று விடுவித்தது.