முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் அத்துமீறி நுழைந்து பார்வையிட்டார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு ஆய்வு செய்ய செல்ல வேண்டுமென்றால் தேனி மாவட்ட நிர்வாகம், இடுக்கி மாவட்ட நிர்வாகம் அல்லது இரண்டு மாநில பொதுப்பணித் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் அமைச்சர் ரோஸி அகஸ்டின் தேனி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் அமைச்சர் ரோஸி அகஸ்டின் ஆய்வை முடித்து விட்டு, தேக்கடியில் உள்ள பெரியாறு இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
முல்லைப் பெரியாறு அணையில் கேரள அமைச்சர் இவர் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிரான கருத்துக்களை மட்டுமே தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக முல்லைப் பெரியாறு அணையின் உள்ளே செல்வதற்கு கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்ட ஆட்சியர் தமிழகத்தில் உள்ள தேனி மாவட்ட ஆட்சியர் இருவரிடமும் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் என்பது விதி.
ஆனால் இந்த விதியை கேரளம் எப்போதும் பின்பற்றியதில்லை. இடுக்கி மாவட்ட ஆட்சியர் மட்டும் அனுமதி பெற்றுவிட்டு அணைக்குள் ஆய்வு மேற்கொள்ள செல்வதை வழக்கமாகவே கொண்டுள்ளனர்.
அதே நேரம் தமிழகத்தின் சார்பாக முல்லைப் பெரியாறு அணைக்கு யார் சென்றாலும் அனுமதி வழங்குவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்துவது கேரளத்தின் வழக்கம்.
இந்நிலையில் நேற்று கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அணையின் தண்ணீர் மட்டத்தை ஆய்வு செய்ய மேற்கண்ட முறையையே பின்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க:ஆர்யன் கான் கைது முதல் ஜாமீன்வரை: கடந்து வந்த பாதை!