கேரள உள்ளாட்சி மன்றத் தேர்தலின் முதல்கட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் 395 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆறாயிரத்து 910 வார்டுகளில் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையும்.
மாநில தேர்தல் ஆணையத்தின்படி, முதல்கட்டத்தில் 88 லட்சத்து 26 ஆயிரத்து 873 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 41 லட்சத்து 58 ஆயிரத்து 395 ஆண்கள், 46 லட்சத்து 68 ஆயிரத்து 267 பெண்கள் மற்றும் 61 திருநங்கைகள் உள்ளனர்.
இதில் 150 என்.ஆர்.ஐ.க்கள், 42 ஆயிரத்து 530 முதல் முறையாக வாக்காளர்கள் உள்ளனர். 11 ஆயிரத்து 225 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
320 பதற்றமான வாக்குச் சாவடிகளில் வெப்காஸ்டிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 56 ஆயிரத்து 122 பணியாளர்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்பு வாக்கெடுப்புகள் (பஞ்சாயத்துகள், நகராட்சிகள், கார்ப்பரேஷன்கள்) கடுமையான கோவிட் -19 விதிமுறைகளின்படி நடத்தப்படுகின்றன, வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்து வெளியேறும்போது தங்கள் கைகளைத் சுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.