கோட்டயம்/இடுக்கி:கேரளாவில் கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நேற்று (அக். 16) ஏற்பட்ட நிலச்சரிவினால் நூற்றுக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை இழந்தும், நிலச்சரிவினுள் சிக்கியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் மீட்புப் பணி
ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் ஆகியோரால் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, கோட்டயம் கூட்டிக்கல் பஞ்சாயத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தம் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடுக்கி கொக்காயரில் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொக்காயரில் காணாமல்போன எட்டு பேரை மீட்கும் பணியில், மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத்தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பெங்களூருவில் ஆபத்தான நிலையில் 404 கட்டடங்கள்!