திரிசூர்:திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரதீஷ் என்பவர் நீண்ட காலமாக ஹெபடோசெல்லுலர் கார்சினோமா(Hepatocellular carcinoma) என்ற நாள்பட்ட கல்லீரல் சிதைவு நோய் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.
பிரதீஷ்க்கு பொருத்தமான கல்லீரல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் உள்ளதா என பரிசோதித்த போது, சரியான பொருத்தம் அமையவில்லை. இருப்பினும் பிரதீஷின் 17 வயது மகள் தேவானந்தாவின் கல்லீரல் அவரது தந்தைக்கு பொருந்துவதாகவும், அவர் கல்லீரல் தானம் அளிக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.