கொச்சி:பாலிவுட் நடிகை சன்னி லியோன் (Sunny Leone) தன் மீது தொடரப்பட்ட பண மோசடி வழக்கை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் விசாரணையை கேரள உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர், கடந்த 2019-ம் ஆண்டு சன்னி லியோனுக்கு அளித்தப் புகாரில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோட்டில் ஒரு நிகழ்ச்சிக்கு வருவதாக, ஒப்பந்தம் செய்து முன் பணமாக ரூ.39 லட்சம் பெற்றுக்கொண்டு நிகழ்ச்சிக்கு வராமல் பணத்தை ஏமாற்றியதாக’ நடிகை சன்னி லியோன், அவரது கணவர் மற்றும் அவரது உதவியாளர் மீது புகார் அளித்தார்.
இதனையடுத்து நடிகை சன்னி லியோன் மற்றும் இருவர் மீது எர்ணாகுளம் குற்றவியல் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரித்து வந்தனர். இந்நிலையில் தன் மீதான வழக்கை எதிர்த்து நடிகை சன்னி லியோன் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், தன் மீதும், தன் கணவர் மற்றும் அவர்களின் ஊழியர் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜியாத் ரகுமான் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நடிகை மீரா மிதுன் தலைமறைவு - நீதிமன்றத்தில் காவல்துறையினர் விளக்கம்