கேரள மாநிலம் பெர்பவூரை சேர்ந்த ஷியாஸ் என்பவர், பிரபல மாடலும் நடிகையுமான சன்னி லியோனுக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து, சன்னி லியோன் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
சன்னி லியோனுக்கு எதிரான மனு தள்ளுபடி! - சன்னி லியோன்
திருவனந்தபுரம்: பிரபல மாடலும் நடிகையுமான சன்னி லியோன் வெளிநாட்டிற்கு செல்ல தடை கோரிய மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சன்னி லியோனுக்கு எதிரான மனு
இதற்கிடையே, வெளிநாட்டிற்கு செல்ல அவர் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என ஷியாஸ் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், சன்னி லியோன் வெளிநாட்டிற்கு செல்ல தடை போட முடியாது எனக் கூறி, ஷியாஸின் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.