தமிழ்நாடு

tamil nadu

"அமைச்சர் பாலகோபாலை பதவி நீக்கம் செய்ய முடியாது" - ஆளுநரின் கோரிக்கையை நிராகரித்த பினராயி விஜயன்!

By

Published : Oct 26, 2022, 9:30 PM IST

தேசிய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் பேசிய அமைச்சர் பாலகோபாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கேரள ஆளுநர் ஆரிஃப் கான் கோரிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார்.

Kerala
Kerala

திருவனந்தபுரம்:கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கடந்த வாரம் திருவனந்தபுரம் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசும்போது, கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் கானை மறைமுகமாக விமர்சித்தார்.

உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்தவர்களால், கேரள பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டைப் புரிந்து கொள்ள முடியாது என்றும், பனாரஸ் பல்கலைக்கழக துணைவேந்தரின் பாதுகாவலர்கள் 5 மாணவர்களைச் சுட்டுக்கொன்றதாகவும், பனாராஸ் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களுக்குக் கூட ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கேரள நிதியமைச்சர் பாலகோபால் நாட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் பேசியதாகவும், அதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரி, கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் முதலமைச்சர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கடந்த 19ஆம் தேதி திருவனந்தபுரம் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசிய பாலகோபால், பிராந்திய வாதத்தைத் தூண்டும் வகையிலும், தேசத்தின் ஒற்றுமையைச் சிதைக்கும் வகையிலும் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சரின் இந்த பேச்சுகள், அவர் பதவிப் பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழியை மீறுவதாக உள்ளதாகவும், இதுபோன்றவர்கள் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் ஆளுநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் இந்த கோரிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநருக்குப் பதில் கடிதம் எழுதியுள்ள பினராயி விஜயன், அமைச்சர் பாலகோபால் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், அவரது பேச்சு ஆளுநரை அவமதிக்கும் வகையில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனால், பாலகோபாலை பதவி நீக்கம் செய்ய முடியாது என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"கரன்சி நோட்டுகளில் கடவுள்கள் லட்சுமி-விநாயகர் உருவம் இருந்தால், நாடு செழிக்கும்" - கெஜ்ரிவால்!

ABOUT THE AUTHOR

...view details