திருவனந்தபுரம் (கேரளா): வரதட்சணையினால் ஏற்படும் கொடுமைகளுக்கு எதிராக, கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று (ஜூலை 14) ராஜ்பவனில் உள்ள அவரது இல்லத்தில் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இவ்வாறு ஆளுநர் ஒரு போராட்டத்தில் ஈடுபடுவது, கேரளாவில் இதுவே முதல்முறை.
இந்த உண்ணாநோன்பு பல்வேறு காந்திய சிந்தனைகள் கொண்ட அமைப்பினரால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
உண்ணாநோன்பைத் தொடர்ந்து போராட்டத்தில் பங்கெடுத்த ஆளுநர்
பொதுமக்கள் வரதட்சணை கொடுக்கவும், வாங்கவும் கூடாது என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், இந்த உண்ணாநோன்பில் பங்கெடுத்தார்.
காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த உண்ணாநோன்பு மாலை 4 மணிக்கு முடிந்தது.
உண்ணாநோன்பு மேற்கொள்ளும் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இதைத்தொடர்ந்து காந்தி பவனில் நடந்த போராட்டத்தில் பங்கெடுத்தார்.
தன்னார்வலர்களின் போராட்டத்தில் பங்கெடுக்க வந்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உயிரிழப்பால் ஆளுநருக்கு ஏற்பட்ட மாற்றம்
கடந்த மாதம் கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட ஆயுர்வேத மருத்துவ மாணவியின் இல்லத்திற்குச் சென்று, ஆறுதல் தெரிவித்த ஆளுநர் ஆரிப் முகமது கான், வரதட்சணைக்கு எதிராக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து விழிப்புணர்வு பரப்புரை செய்யத் தான் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக பேசிய ஆரிப் முகமது கான், 'சட்டப்படி வரதட்சணைக் கொடுமை என்பது மிகவும் தீங்கானது. அனைவருக்கும் வரதட்சணைக்கு எதிரான சமூகப் பார்வை தேவை’ என்றார்.
இதையும் படிங்க: வரதட்சணை தீயில் கருகிய விஸ்மயா- நடந்தது என்ன?