திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படும் என அம்மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நான்காயிரம் ரூபாய் ஓணம் பண்டிகை போனஸாக வழங்கப்படும் என்றும், போனஸ் பெறத்தகுதி பெறாத அரசு ஊழியர்களுக்கு 2 ஆயிரத்து 750 ரூபாய் ஓணம் பண்டிகை சிறப்புப் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கு ஓணம் சிறப்புப் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஊதியத்திலிருந்து சுமார் 20 ஆயிரம் ரூபாயை பண்டிகைக் கால முன்பணமாக பெற்றுக் கொள்லலாம் என்றும், பகுதி நேர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஆறாயிரம் ரூபாயை முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.