திருவனந்தபுரம்:நவீன தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்தில், பெரும்பாலோர் சுயமாக யூ-டியூப் சேனல் தொடங்குவது வாடிக்கையாகிவிட்டது. தங்களுக்கு தெரிந்த விஷயங்களை வீடியோவாக பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகின்றனர். உலகையே உள்ளங்கையில் அடக்கும் பொருளாக யூ-டியூப் உருவெடுத்துள்ளது. பொதுவாக ஒரு யூ-டியூப் சேனலை ஆயிரம் பேர் subscribe செய்தாலும், குறிப்பிட்ட வீடியோ 12 மாதங்களில் 4,000 மணி நேரம் பார்க்கப்பட்டிருந்தாலும், யூ-டியூப்பில் பணம் சம்பாதிக்கும் தகுதியை பெறுகிறது.
இந்நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்பு படை தங்கள் பணிகளை விளக்கும் வகையில், யூ-டியூப் சேனல் தொடங்க கேரள மாநில அரசிடம் அனுமதி கோரியது. ஆனால், அதற்கு மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அரசுத்துறை ஊழியர்கள், தனியாக யூ-டியூப் சேனல் தொடங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.