திருவனந்தபுரம்(கேரளா):இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் அரசால் வடிவமைக்கப்பட்ட C Space என்ற OTT தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளமானது கேரளாவின் பிறந்த தினமான நவம்பர் 1 அன்று வெளியிடப் போவதாக அம்மாநில் கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியன் கூறியுள்ளார். மேலும் இந்த தளமானது கேரளா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால் புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த C Space என்ற OTT தளமானது பார்வையாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளருக்கு வருவாயை வழங்கும். இது 'ஒரு முறை பார்ப்பதற்கு பணம் செலுத்துதல்’ முறையில் செயல்பட உள்ளது. பார்வையாளர் அவர் பார்க்க விரும்பும் படங்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது. திரையரங்கில் வெளியான பிறகுதான் C Space என்ற OTT தளத்தில் படங்கள் திரையிடப்படும்.