கேரள மாநிலத்தில் இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 1.75 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது. பொதுக்கல்வி புத்துணர்வுப் பணி அமல்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 6.8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
முந்தைய கல்வி ஆண்டோடு ஒப்பிடும்போது, 8170 பிள்ளைகள் 1ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். அதேபோல் 43 ஆயிரத்து 789 மாணவர்கள் 5 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். மேலும், 8ஆம் வகுப்பில், 35 ஆயிரத்து 606 பேர் சேர்ந்துள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 074 மாணவர்கள் பல்வேறு வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். மொத்தம் 33 லட்சத்து 75 ஆயிரத்து 340 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.