தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு - கேரளாவில் நாளை பொங்கல் விடுமுறை! - கேரளாவில் 6 மாவட்டங்களில் நாளை பொங்கல் விடுமுறை

கேரளாவில் பொங்கல் விடுமுறை ஜன.15ஆம் தேதி அறிவித்திருந்தை மாற்றி நாளை (ஜன.14) விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

kerala-government-announces-pongal-holiday
kerala-government-announces-pongal-holiday

By

Published : Jan 13, 2022, 5:56 PM IST

கேரளாவில் ஆறு மாவட்டங்களுக்கான பொங்கல் விடுமுறையை ஜனவரி 14ஆம் தேதி மாற்றி அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார்.

அக்கடிதத்தில், ”தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன்.

ஜனவரி 14 ஆம் தேதி, புனிதமான "தை" தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்; ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15 ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஏற்கனவே 15ஆம் தேதி அறிவித்திருந்த உள்ளூர் விடுமுறையை 14ஆம் தேதி அன்று மாற்றி அறிவித்துள்ளார். அதன்படி, நாளை(ஜன,14) கேரள மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகமுள்ள ஆறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இஸ்ரோவின் புதிய தலைவராகும் சோம்நாத், விடைபெறுகிறார் சிவன்

ABOUT THE AUTHOR

...view details