தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிவசங்கரின் காவலை நீட்டிக்க அமலாக்க இயக்குநரகம் கோரிக்கை!

திருவனந்தபுரம் : தங்க கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலர் எம்.சிவசங்கரிடம் விசாரணை மேற்கொள்ள, அவரது காவலை நீட்டிக்க வேண்டுமென அமலாக்க இயக்குநரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவசங்கரின் காவலை நீட்டிக்க அமலாக்க இயக்குநரகம் கோரிக்கை!
சிவசங்கரின் காவலை நீட்டிக்க அமலாக்க இயக்குநரகம் கோரிக்கை!

By

Published : Nov 11, 2020, 9:41 PM IST

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி ராஜாந்திர பொருள்கள் கொண்டுவரப்பட்ட பெட்டிகளிலிருந்து, ஏறத்தாழ 30 கிலோ எடைகொண்ட ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை வசம் கேரள மாநில அரசால் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கம் துறையும் இணைந்துகொண்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட பலரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கரிடம் சுங்க அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், கடந்த அக்டோபர் 28ஆம் தேதியன்று அவரை கைது செய்தனர். தங்க கடத்தல் வழக்கு, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக சிவசங்கரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவரது காவலை மேலும் நீட்டிக்கக் கோரி அமலாக்கத்துறையின் சார்பில் எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு முதன்மை நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது. அத்துடன், சிவசங்கருக்கு எதிராக கூடுதல் ஆதாரங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க அமலாக்கத்துறையினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சிவசங்கரிடம் மேலதிக விசாரணை நடத்த அமலாக்க இயக்குநரகம் கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளது. சிவசங்கருக்கு லைஃப் மிஷன் திட்டங்கள் மற்றும் கே.எஃப்.ஓ.என் மோசடிகள் பற்றி தெரியும் என்று ஸ்வப்னா சுரேஷ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details