கேரளாவை உலுக்கிவரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றிவாளிகளாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷின் மீதான வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் தலைமை நீதிபதி, ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித் இருவரையும், வரும் டிசம்பர் 8ஆம் தேதிவரை சுங்க அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வழக்கு விசாரணை தொடர்பாக அதிகாரிகளுக்கு ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் ஊடகங்களில் கசிந்ததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் உரிய விளக்கத்தை நீதிமன்றத்தில் அளிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கத்தை கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சுங்கத் துறை அலுவலர்கள் கைப்பற்றினர்.இந்தக் கடத்தல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் தனக்குள்ள நெருக்கம் மூலம் இந்தக் கடத்தலில் ஈடுபட்டார் எனப் புகார் எழுந்துள்ளது.
இதில் முதலமைச்சரின் அப்போதைய முதன்மை செயலராக இருந்த சிவசங்கர் நேரடியாக தொடர்பிலிருந்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், அன்மையில் அவர் அன்மையில் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:மதமாற்றம் தடுப்பு சட்டம்: பரேலி காவல் துறையின் முதல் வழக்குப்பதிவு!