எர்ணாகுளம்:கொச்சியில் உள்ள காலூர் மைதானத்தில் காலை நடைபயிற்சி செய்பவர்களுக்கு சங்கீதாவின் முகம் பரிச்சயம். அங்கு ஒரு சின்ன கடை அமைத்து தேநீர், பழங்கள், வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டுவரப்பட்ட உணவுகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார். கடந்த மார்ச் 2020ஆம் ஆண்டு இளநிலை வணிகவியல் துறையில் தேர்ச்சி அடைந்த சங்கீதாவுக்கு, ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதுதான் கனவு.
இவரது தந்தை சலவை தொழிலாளி என்பதால் தனியாக ஐஏஎஸ் பயிற்சி வகுப்புக்கு சென்று படிக்கும் அளவிற்கு அவரின் குடும்பச்சூழல் இல்லை. எனவே, பகுதி நேரமாக தேநீர் விற்பது போன்றவற்றால் வருமானம் ஈட்டி வருகிறார். இதில் பெற்ற வருமானத்தை சேமித்து வைத்து, தற்போது திருச்சூரில் உள்ள குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேர இருக்கிறார்.
கனவை நோக்கி...