திருவனந்தபுரம்:கேரளாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்கள் உள்பட 30,000 அரசு அலுலகங்கள், பள்ளிகளுக்கு மாநில அரசு சார்பில் இலவச அதிவேக இன்டெர்நெட் வசதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் திட்டத்திற்காக ரூ.1,548 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்தத் திட்டப் பணிகள் 2020ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா காரணமாக நீண்டுள்ளது. இந்த நிலையில், நேற்று(ஏப். 27) இந்த திட்டம் முதல்கட்டமாக கோழிக்கோட்டில் செயல்படுத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.