திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கேசவதாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது பெண்மணி ஒருவர், அவரது வீட்டுக் கிணற்றில் இருந்து நேற்று(ஆகஸ்ட் 7) சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு, கிணற்றில் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
60 வயது மூதாட்டி கொலை வழக்கு - மேற்கு வங்க தொழிலாளர்கள் 5 பேர் கைது!
திருவனந்தபுரத்தில் 60 வயது பெண்மணி கொல்லப்பட்ட வழக்கில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் நடத்த இடத்தில் திருவனந்தபுரம் நகர காவல் ஆணையர் ஸ்பர்ஜன் குமார் விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "உயிரிழந்த பெண்மணியின் வீட்டருகே கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஆறு தொழிலாளிகள் இந்த சம்பவத்தை செய்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்படி 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். தலைமறைவான ஆறாவது நபரை தேடி வருகிறோம். இந்த ஆறு பேரில் ஒருவர் இறந்த பெண்மணியின் வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். கொள்ளையடிப்பதற்காகவே கொலை நடந்திருக்கும் என சந்தேகிக்கிறோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: அதிவேகமாக ஜாகுவார் காரை ஓட்டி ஏற்பட்ட விபத்து - சாமானியப்பெண்மணி உயிரிழப்பு!