திருவனந்தபுரம்:கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியான எல்.டி.எஃப் கூட்டணி 99 இடங்களை வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. அம்மாநில முதலமைச்சராக பினராயி விஜயன் மே 20ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
இதனையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் இன்று (மே 24) பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளும் கேரள எம்.எல்.ஏ ஏ.ராஜா இந்நிலையில் கேரளா, இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் சட்டப்பேரவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவான வழக்கறிஞர் ஏ.ராஜா, தனது தாய்மொழி தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றுள்ளார்.
இதனை, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் பக்கத்தில் குறிப்பிட்டு, ஏ.ராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நானோ அல்லது என் மகளோ பள்ளியை நிர்வகிக்கவில்லை - ஒய்.ஜி. கொடுத்த ஜெர்க்!