திருவனந்தபுரம் :கேரளமாநிலத்தில் உள்ள பிராணவாயு இருப்பு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் துரித கட்டுபாட்டு அறையை அம்மாநில அரசு திறந்துள்ளது.
காவல் துறை, சுகாதாரத் துறை, போக்குவரத்து துறை, பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவற்றை குழுக்களாக ஒன்றிணைத்து இந்த கட்டுப்பாட்டு அறை கட்டமைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில், சுமார் 80 இடங்களில் இத்தகைய சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் பிராணவாயு இருப்பு , மற்றும் அதன் தேவை குறித்து அறிந்து, செயல்படுத்த தொடங்கியுள்ளது கேரள அரசு.