நெதர்லாந்தில் இட்லி, தோசை கிடைக்காததால் சொந்தமாக இட்லி, தோசை மாவு தயாரிக்கும் கம்பெனியினை உருவாக்கி, கேரளாவைச் சேர்ந்த ஐடி தம்பதிகள் அசத்தி வருகின்றனர்.
ஐடி ஊழியர்களான கேரளாவைச்சேர்ந்த நவீன் மற்றும் ரம்யா ஆகியோர் பணி காரணமாக 11 ஆண்டுகளுக்கு நெதர்லாந்தில் குடியேறினர். அங்கு பணிபுரிந்து வந்த தம்பதிகள் தென் இந்திய உணவு கிடைக்காமல் குறிப்பாக இட்லி, தோசை கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
எங்கு பார்த்தாலும் ஃப்ரீசரில் வைக்கப்பட்ட இட்லி, தோசை மட்டுமே கிடைத்ததால் விரக்தி அடைந்த தம்பதிகள், ஒரு கட்டத்தில் இதனை தொழிலாகத் தொடங்க முடிவு செய்தனர். முதலில் கிரைண்டர் மூலம் 10 கிலோ இட்லி தோசை மாவு அரைத்து விற்பனை செய்துள்ளனர்.
இதற்கு அப்பகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து நவீன் ஐடி வேலையை விட்டுவிட்டு, இட்லி தோசை மாவை பெரும் அளவில் தயாரிப்பதற்காண உபகரணங்களை வாங்கி 500 கிலோ வரை தயாரித்தனர். வேலைக்கு செல்லும் ரம்யாவும் அவ்வப்போது கணவனுக்கு உதவி செய்துவந்துள்ளார்.
இதற்கு நவீன், ரம்யா தம்பதி 'Mother's Kitchen' எனப் பெயர் வைத்துள்ளனர். இங்கு வாரத்தில் மூன்று நாட்கள் மாவு தயாரிக்கப்பட்டு, அந்நாட்டில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
முதலில் சிறியதாக தொடங்கப்பட்ட இந்த இட்லி தோசை மாவு வியாபாரம், தற்போது அந்த நாட்டின் 75 விழுக்காடு சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இந்த மாவு கிடைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இதனால் இந்த மாவு வியாபாரத்தை சொந்த ஊரிலும் தொடங்கலாம் என தம்பதிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
இட்லி தோசை மாவு வியாபாரத்தில் நெதர்லாந்தை கலக்கும் கேரள தம்பதி இதையும் படிங்க:19 வயது பெண்ணை கரம் பிடித்த 70 வயது தாத்தா.. காதல் மலர்ந்தது எப்படி?