தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதலமைச்சர் அருகில் உட்கார ரூ.82 லட்சம் கட்டணமா? காங்கிரஸ் குற்றச்சாட்டு!

முதலமைச்சர் பினராயி விஜயனின் அமெரிக்க பயணத்தின் போது அவருடன் அருகில் அமர அல்லது நிற்க 82 லட்ச ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

kerala
kerala

By

Published : Jun 1, 2023, 10:55 PM IST

திருவனந்தபுரம் :கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனின் அமெரிக்க பயணத்தின் போது, அவருடன் அமர்ந்து பேச நபர் ஒருவக்கு 82 லட்ச ரூபாய் என வசூலிக்கப்படுவதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த என்.ஆர்.ஐ. மக்களின் அமைப்பான லோகா கேரளா சபாவின், மாநாடு அமெரிக்காவில் வரும் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் இந்த அமெரிக்க பயணத்தின் போது அவருடன் அமர்ந்து பேச நபர் ஒருவருக்கு 25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த திடீர் குற்றச்சாட்டு மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பேசிய கேரள எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான வி.டி. சதீசன், "ஒரு கம்யூனிஸ்ட் முதலமைச்சர், இருப்பவர், இல்லாதவர் என்ற வித்தியாசத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதாக கூறினார். மேலும் முதலமைச்சர்ர் அருகில் உட்கார 82 லட்ச ரூபாய் வசூலிப்பதா என்றும் இந்த தொகையை செலுத்த முடியாதவர்கள் வாசலுக்கு வெளியே தள்ளப்படுவார்களார் என்றும் கேள்வி எழுப்பினார்.

அரசு மற்றும் முதலமைச்சர் பெயரில் இந்த நிதி வசூல் செய்ய அனுமதித்தது யார் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் இந்த காரணத்திற்காக லோகா கேரளா அமைப்பின் நிகழ்வை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வரும் ஜூன் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இந்த மாநாட்டை அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கேரளாவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் மக்கள் விவகாரத்துறை என்ற நோர்கா அமைப்பு இந்த நிகழ்வை நடத்த உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் முதலமைச்சர் அருகில் அமர்ந்து உணவு சாப்பிட்ட அல்லது நின்று பேச பணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை என்று நிகழ்வை நடத்தும் அமைப்பு குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து உள்ளது.

மேலும், கேரள நிதி அமைச்சர் கே.என். பாலகோபாலும் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "நோர்கா அமைப்பு தான் நிகழ்வுக்கான அனைத்தையும் கையாள்வதால், நிதி சேகரிப்பு எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இந்த கூட்டத்தில் எந்த தவறான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது" என்று அவர் கூறினார்.

அதேபோல் நோர்கா அமைப்பின் துணைத் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். கேரள அரசும், நோர்கா நிறுவனமும் பயண ஏற்பாடுகளை மேற்கொண்ட நிலையில், நிகழ்ச்சியை அமெரிக்காவில் உள்ளவர்கள் ஏற்பாடு செய்ததாகவும் முதலமைச்சரின் பெயரில் எந்த பதிவுக் கட்டணமோ, நிதியோ வசூலிக்கபடவில்லை என நோர்கா அமைப்பின் துணைத் தலைவர் கூறினார்.

இதையும் படிங்க :Dhoni surgery : டோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை... மருத்துவர்கள் அறிவுரை!

ABOUT THE AUTHOR

...view details