தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமலாக்க இயக்குநரகம் மீது கேரள முதலமைச்சர் புகார் - kerala news

திருவனந்தபுரம்: அமலாக்க இயக்குநரகம் மீது கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் புகார் அளித்துள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராய் விஜயன்
அமலாக்க இயக்குநரகம் மீது கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் புகார்

By

Published : Mar 4, 2021, 11:15 AM IST

திருவனந்தபுரத்தில் அமலாக்க இயக்குநரகம் (ED) மீது, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் புகார் அளித்துள்ளார். அமலாக்க இயக்குநரகம், KIIFB-க்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும் இவர் கூறியுள்ளார். பின் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அரசியல் நலனுக்காக, அமலாக்க இயக்குநரகம் (ED) அலுவலர்களை வரவழைப்பதாக பினராய் விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் மாதிரி நடத்தை விதிகளை மீறியதற்காக விசாரணை முகவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், ஆணையத்திடம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 28ஆம் தேதி அன்று பாஜக யாத்திரையில் பங்கேற்றபோது, நிர்மலா சீதாராமன் அளித்த அறிக்கை புலனாய்வு அமைப்புகள், அரசியல் பயன்பாட்டிற்கு சான்றாகும் என்றும் கேரள முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details