நாட்டின் முதல் ட்ரோன் தடயவியல் ஆய்வு மையம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது. 'சைபர்டோம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மையத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திறந்துவைத்தார்.
இந்த புதிய ஆய்வு மையம் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த சவால்களை எதிர்கொள்ளவும், அன்டி ட்ரோன் தொழில்நுட்பத்தையும் தயாரிக்கவும் உதவும் எனக் கூறப்படுகிறது.
ஆய்வு மையத்தை திறந்துவைத்து பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், இந்த புதிய ஆய்வு மையத்தை விரைவாக திறக்க வேண்டும் என மாநில அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்தது. இதன் மூலம் தேச விரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு கட்டுப்படுத்தப்படும்.
நாட்டின் முதல் ட்ரோன் தடயவியல் ஆய்வு மையம் திறப்பு மேலும், கேரளாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கையளா ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த மாநில காவல்துறை திட்டமிட்டுள்ளது என்றார். இந்த விழாவில் கேரளா மாநில காவல் தலைவர், மூத்த காவல் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் ட்ரோன் கண்காட்சியும் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க:ட்விட்டரில் மீண்டு(ம்) வந்த ராகுல் காந்தியின் கணக்கு!