தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிபிஐக்கு நெருக்கடி: சிறப்பு அனுமதியை திரும்பப்பெறும் கேரளா!

திருவனந்தபுரம்: மாநில அரசின் அனுமதி இல்லாமல் விசாரணை மேற்கொள்ளும் சிபிஐயின் அதிகாரத்தைத் திரும்பப்பெற கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

cbi investigations
cbi investigations

By

Published : Nov 4, 2020, 9:35 PM IST

Updated : Nov 4, 2020, 9:48 PM IST

மாநிலத்தில் சோதனைகள், விசாரணையை மேற்கொள்ள சிபிஐக்கு அளித்துவந்த அனுமதியை திரும்பப்பெற கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்மூலம், ஒவ்வொரு வழக்கிலும் விசாரணையை மேற்கொள்ள மாநில அரசின் அனுமதி கட்டாயமாகியுள்ளது. இருப்பினும், ஏற்கனவே சிபிஐ விசாரித்துவரும் வழக்குகளுக்கு இது பொருந்தாது.

பொதுவாக, டெல்லியில் மட்டுமே மாநில அரசின் அனுமதி இல்லாமல் விசாரணையை மேற்கொள்ள சிபிஐக்கு அதிகாரம் உள்ளது. மற்ற மாநிலங்களில் மாநில அரசின் அனுமதியை பெற்றே சிபிஐ விசாரணை மேற்கொண்டுவருகிறது. வடக்கன்சேரி மோசடி வழக்கை சிபிஐ விசாரித்துவரும் நிலையில், இந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

மத்திய அரசுக்கு ஆதரவாக சிபிஐ செயல்பட்டுவருவதாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட காலம்வரை, விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு பொது ஒப்புதல் வழங்கப்படும்.

தற்போது, அது திரும்பப்பெறப்படவுள்ளது. முன்னதாக, மேற்குவங்கம், ஆந்திரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் சிபிஐக்கு வழங்கிய அனுமதியை திரும்பப்பெற்றன.

Last Updated : Nov 4, 2020, 9:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details