திருவனந்தபுரம்:கேரளாவின் மிகவும் சர்ச்சைக்குரிய மதுக்கொள்கையை ஆண்டுதோறும் மாற்றியமைப்பது அம்மாநில அரசின் வழக்கம். இந்நிலையில், மாநிலத்தின் மதுக்கொள்கையில் புதிய மாற்றங்களைக்கொண்டு வந்த நிலையில், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உரிமத் தொகை அதிகரிக்கும்: புதிய கொள்கை முடிவில், 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஐடி பார்க்குகளில் மட்டும் உரிமத்துடன் மதுபான பார்கள் மற்றும் பப்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, ஐடி பார்க்குகளில் கேரளாவில் பப்களுக்கு உரிமம் வழங்கப்பட்டதில்லை. மேலும், ஐடி நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தை வைத்துதான் அந்நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐடி பார்க்குகளின் உள் அமைக்கப்படும் பார்களுக்கும், பப்களுக்கும் வெளியாட்கள் செல்ல அனுமதி கிடையாது. ஐடி பார்க் நிர்வாகம் தனியார்களிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பார்களையும், பப்களையும் அமைத்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. பார்களின் உரிமத்திற்கு வசூலிக்கப்படும் தொகையை விட, பப்களுக்கான தொகை அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.