திருவனந்தபுரம்: கேரளாவில் கரோனா தொற்று பரவல் குறையாத நிலையில், நிபா வைரஸ் பாதிப்பு பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 2018இல், தென்னிந்தியாவில் முதன்முதலாக கோழிக்கோட்டில்தான், நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
தற்போது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதே மாவட்டத்தில் 12 வயது சிறுவன், நிபா வைரஸ் தொற்றின் பாதிப்பு காரணமாக செப்டம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தான்.
மீண்டும் நிபா
இதையடுத்து, சிறுவனுடன் தொடர்பிலிருந்த நபர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அச்சிறுவனுடன் அதிக தொடர்பில் இருந்த 20 பேர்களில், இரண்டு பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி தென்பட்டதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை அம்மாநில சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
தொடர்பிலிருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரம்
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், " நிபா வைரசால் உயிரிழந்த சிறுவன், அதிகப்படியான நபர்களுடன் தொடர்பிலிருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
அச்சிறுவனுடன் அதிக தொடர்பில் இருந்த 20 பேர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது