கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட சுற்றுமுடிவுகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 87 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது.
கேரள தேர்தல்: மெட்ரோ மேன் ஸ்ரீதரன் முன்னிலை! - மெட்ரோமென் ஸ்ரீதரன்
கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில், மெட்ரோ மேன் ஸ்ரீதரன் முன்னிலை பெற்றுள்ளார்.
மெட்ரோமென் ஸ்ரீதரன்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 50 தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகிறது.
பாலக்காடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மெட்ரோ மேன் ஸ்ரீதரன் முன்னிலை பெற்றுள்ளார். நீமம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகர் முன்னிலை பெற்றுள்ளார். பாஜக சார்பில் கோழிக்கோடு தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
Last Updated : May 2, 2021, 12:21 PM IST