தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! - kerala assembly oppose unifom civil law

கேரள சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 8, 2023, 11:00 PM IST

திருவனந்தபுரம்:கேரள சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமையான இன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த பொது சிவில் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, மிசோரம் சட்டப்பேரவையானது பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது தொடர்பாக, ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது.

இன்று காலை கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டப்பேரவைக்கு வருகை தந்த முதலமைச்சர் பினராயி விஜயன், பொது சிவில் சட்டமானது ஒருதலைப்பட்சமானது என்றும், மற்றும் துரிதகதியில் நிறைவேற்றப்படுவதாகவும் கூறி, அதனை எதிர்க்கும் தீர்க்கும் தீர்மானத்தை கேரள சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர் பொது சிவில் சட்டமானது, மனு ஸ்மிருதியை அடிப்படையாக கொண்டது எனவும், மேலும் இச்சட்டமானது சங் பரிவார் கொள்கைகளின் செயல் வடிவம் என்றும் வாதிட்டார். மேலும் தொடர்ந்து பேசிய பினராயி விஜயன், பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களின் விவகாரத்து உரிமையை குற்றமாக்குகிறது என்றும், ஆனால், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

கேரள முதலமைச்சரால் முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்ய வலியுறுத்துவதாகவும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பொது சிவில் சட்டத்துக்கு எதிரான இத்தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்தது.

மேலும் தொடர்ந்து கேரள சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், பொது சிவில் சட்டம் என்பது கட்டளையிடும் வகையில் மட்டுமே உள்ளது என்றும்; அது கட்டாயமில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25ஆவது பிரிவின் படி, இந்தியர்கள் எந்த ஒரு மதப்பழக்கங்களையும் பின்பற்றலாம் எனக் கூறப்பட்டுள்ளதாகும். ஆனால், இந்த சட்டம் அரசியலமைப்பு உரிமையை மீறும் வகையில் இருக்கிறது என்றார்.

இச்சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு, மக்கள் மத்தியில் இச்சட்டம் குறித்து கலந்துரையாடல்களைக்கொண்டு வந்து, கிடைக்கும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், அதனைச் செய்யாமல் இருப்பது கவலைக்குரியது என்று கூறினார்.

பொது சிவில் சட்டத்திணிப்பு என்பது, ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையைத் தாக்கும் நடவடிக்கையாகும் எனக்குறிப்பிட்டார்.

மேலும் அன்றைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்டம் தொடர்பாக வெவ்வேறு கருத்துருக்கள் கொண்ட விவாதம் நடந்ததாகவும், பி.ஆர். அம்பேத்கர் கொண்டு வர முயற்சித்தாலும், அதனை உறுதிபட அவர் கட்டாயம் வேண்டும் என்று தெரிவிக்கவில்லை என்றும் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் பேசினார்.

இந்த பொது சிவில் சட்டத்துக்கு எதிராக ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும், எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் கோழிக்கோட்டில் தனித்தனியாக கருத்தரங்குகளை ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் பல்வேறு மதத்தினர் பங்கெடுத்தனர்.


இந்த பொது சிவில் சட்டத்துக்குப் பின்பு, பாஜகவின் தூண்டுதல் இருப்பதாகவும், அதைத் திணிக்கும் நடவடிக்கைகளில் இருந்து மத்திய பாஜக அரசு விலக வேண்டும் என பினராயி விஜயன் எச்சரித்தார். மேலும், இந்த பொது சிவில் சட்டம் ,இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து, ஒரே நாடு, ஒரு கலாசாரம் என்னும் வகுப்புவாத திட்டத்தை முனைப்பு காட்டுவதாகவும், இந்நடவடிக்கைகளில் இருந்து மத்திய அரசும் சட்ட ஆணையமும் விலக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: சிறைச்சாரல் இன்னிசை குழு - கைதிகளே பாடல் எழுதி இசையமைத்த பாடல் இணையத்தில் வைரல்!

ABOUT THE AUTHOR

...view details