நிதி ஆயோக் தரவரிசை: 2ஆம் இடத்தில் தமிழ்நாடு - NITI Aayog
நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் தரவரிசையில், தமிழ்நாடு மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
நிதி ஆயோக்
By
Published : Jun 4, 2021, 11:31 AM IST
இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் அடிப்படையில் ஆண்டுதோறும் மாநிலங்களைத் தரவரிசைப்படுத்தி நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டு வருகிறது.
சுகாதாரம், கல்வி, பாலினம், பொருளாதார வளர்ச்சி, நிறுவனங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றம் மதிப்பிடப்பட்டு, தரவரிசை கணக்கிடப்படுகிறது.
நிதி ஆயோக் தரவரிசை முழு விவரங்கள்
இந்நிலையில், 2020- 2021ஆகிய ஆண்டுகளுக்கான பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு நேற்று (ஜூன்.3) வெளியிட்டுள்ளது.
அதில், கேரள மாநிலம் 75 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், இமாச்சல்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களும் 74 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆந்திரா, கோவா, கர்நாடகா, உத்தராகண்ட், சிக்கிம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
நிதி ஆயோக் மூன்றாம் பதிப்பு
பிகார், ஜார்க்கண்ட், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் மிகக்குறைவான புள்ளிகள் பெற்று கடைசி இடம் வகிக்கின்றன. இதில், பிகார் மிக மோசமாக வெறும் 52 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
பிரிவு
சிறந்து விளங்கும் மாநிலங்கள், யூடி
வறுமை ஒழிப்பு
தமிழ்நாடு,டெல்லி
பசியின்மை
கேரளா, சண்டிகர்
பொது சுகாதாரத்துறை
குஜராத்,டெல்லி
கல்வியறிவு
கேரளா,சண்டிகர்
பாலின சமநிலை
சத்தீஸ்கர், அந்தமான் நிக்கோபார்
சுத்தமான குடிநீர் வழங்குவதல்
கோவா, லட்சத்தீவு
சுத்தமான எரிசக்தி
ஆந்திரா, கோவா, தமிழ்நாடு, தெலங்கானா
பொருளாதார வளர்ச்சி
இமாச்சல் பிரதேசம், சண்டிகர்
உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்
குஜராத், டெல்லி
நிதி ஆயோக் தரவரிசை
நாட்டின் ஒட்டுமொத்த நிலையான வளர்ச்சி இலக்க குறியீட்டு எண், 6 புள்ளிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.