தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஷாப்பிங் மாலில் நடிகைக்கு நேர்ந்த சோகம்: விசாரணையை தொடங்கிய போலீஸ்! - லுலு மார்கெட்

எர்ணாகுளம்: சூப்பர் மார்கெட்டில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட நபர்கள் குறித்தான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

abuse
abuse

By

Published : Dec 18, 2020, 2:57 PM IST

பிரபல இளம் நடிகை தனது தாய், சகோதரி, சகோதருடன் கொச்சியில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்கு சென்றுள்ளார். தாயும் சகோதரும் சூப்பர் மார்கெட்டில் காய்கறி பிரிவுகளில் பொருள்களை வாங்கிகொண்டிருந்தனர். நடிகையும் அவரது சகோதரியும் வேறுறொரு பிரிவில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இருவர் நடிகையை கடந்து செல்கையில் வேண்டுமென்றே அவர் மீது கைவைத்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை உடனே இதற்கு எதிர்வினையாற்றாமல் தனது சமூகவலைதளத்தில் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டார்.

பாதிகப்பட்ட நடிகையின் பதிவு

அந்த பதிவில், "இரண்டு பேர் என்னை பின் தொடர்ந்தனர். அந்த சூப்பர் மார்க்கெட்டில் மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் என்னை அவர்கள் தாண்டிசெல்கையில் என் பின்பக்கத்தில் கைவைத்து சென்றனர். இதனால் நான் கடும் அதிர்ச்சியடைந்தேன். சிறிது நேரம் என்ன நடந்தது என்று என்னால் உணரமுடியவில்லை. அவர்கள் இதை தெரிந்தே செய்தார்களா இல்லையா என எனக்கு தெரியவில்லை. ஆனால் இது தவறாக தெரிந்தது.

இதை பார்த்த என் சகோதரி என் அருகில் வந்து நான் சரியாக இருக்கிறேனா என கேட்டார். அப்போது என்னால் அவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை. பின்னர் பண கவுண்டரில் நான் நிற்கும் போது அவர்கள் என்னிடம் வந்து பேச முயற்சித்தனர். நான் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

பெண்ணாக இருப்பது சோர்வை தருகிறது. ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியே செல்கையில் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டியிருக்கிறது. வெளியே சென்றாலும் நாம் அணிந்திருக்கும் ஆடையை கவனித்து கொண்டிருக்க வேண்டியுள்ளது" என அந்த பதிவில் கூறியிருந்தார்.

இது குறித்து நடிகை காவல்துறையினரிடம் முறையாக புகார் அளிக்கவில்லை. ஏனினும் இவரின் இந்த பதிவால் சமூகவலைதளத்தில் பலர் அவருக்கு ஆதரவும் ஆறுதலும் கூறியும் வருகின்றனர். இந்நிலையில், அந்த சூப்பர் மார்க்கெட்டில் உள்ள சிசிடிவி காட்சியை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மாநில மகளிர் ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details