திருவனந்தபுரம்:ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், இன்று (ஆகஸ்ட். 9) முதல் சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் சுற்றுலா தலங்கள் திறக்கப்படுகின்றன. வணிக வளாகங்கள் வரும் 11ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா செல்பவர்கள், கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியவர்களாக இருக்க வேண்டும். தடுப்பூசி குறைந்தது இரண்டு வாரங்கள் முன்பு செலுத்தியிருக்க வேண்டும். அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கரோனா ஊடங்கு காரணமாக, கேரள சுற்றுலா துறைக்கு கடந்தாண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை ரூ. 33,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'பாரத் தர்ஷன்' சுற்றுலா ரயில் - இந்தியாவின் சுற்றுலா தளங்களை காண அரிய வாய்ப்பு