டெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பஞ்சாப் மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் திங்கள்கிழமை (ஜூன் 28) வாக்குறுதி ஒன்றை அளித்தார்.
ட்விட்டரில் அவர் அளித்துள்ள அந்த வாக்குறுதியில், “பஞ்சாப் மாநிலத்தில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பஞ்சாப் பெண்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் டெல்லியில் நிலைமை அப்படி இல்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குகிறோம். இதனால் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆகையால் பஞ்சாப்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இலவச மின்சாரம் வழங்குவோம். நாளை சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.