டெல்லியில் உத்தரப் பிரதேச விவசாய சங்க தலைவர்களுடன் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேளாண் சட்டங்கள் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றார். மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தில் மற்ற விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய தலைவர்களுடன் கலந்துரையாடிய கெஜ்ரிவால்! - விவசாய தலைவர்கள்
டெல்லி: வேளாண் சட்டங்கள் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விவசாய தலைவர்களுடன் இன்று கலந்துரையாடல் மேற்கொண்டார்.
டெல்லி சட்டப்பேரவை
போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கலோட், சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம், ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக, புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் டெல்லியின் எல்லை பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.