தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆட்டோ டிரைவரின் அழைப்பை ஏற்று சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் - வைரலாகும் வீடியோ - ஆட்டோவில் செல்ல போலீசார் அனுமதி வழங்கவில்லை

குஜராத் சென்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (செப்-12) ஆட்டோ டிரைவரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு சென்று உணவு அருந்திய வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

Etv Bharatஆட்டோ டிரைவரின் அழைப்பை ஏற்று சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் - வைரலாகும் வீடியோ
Etv Bharatஆட்டோ டிரைவரின் அழைப்பை ஏற்று சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் - வைரலாகும் வீடியோ

By

Published : Sep 13, 2022, 9:17 AM IST

குஜராத்: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். இந்த பயணம் அடுத்து வரக்கூடிய குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பயணமாகும். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அகமதாபாத்தில் நேற்று (செப்-12) நடந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அக்கூட்டத்தில் பேசிய ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் தண்டனி கெஜ்ரிவாலை தனது வீட்டிற்கு உணவு சாப்பிட வருமாறு அழைப்பு விடுத்தார். இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், எத்தனை மணிக்கு வர வேண்டும் என கேட்டார். மேலும், ‘ என்னை நீங்களே ஆட்டோவில் வந்து அழைத்துச் செல்லுங்கள்’ எனக் கூறினார். இதனையடுத்து விக்ரம் அவரது ஆட்டோவுடன் இரவு 8 மணியளவில் தாஜ் ஸ்கை லைன் ஹோட்டலுக்கு சென்றார்.

ஆட்டோ டிரைவரின் அழைப்பை ஏற்று சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் - வைரலாகும் வீடியோ

அங்கு இருந்து க கே.கே.நகரில் உள்ள விக்ரம் தண்டனியின் வீட்டிற்கு கெஜ்ரிவாலை அழைத்துச் சென்றார். அப்போது ​​குஜராத் மாநிலத் தலைவர் கோபால் இத்தாலியா, தேசிய இணைச் செயலாளர் இசுதன் காத்வி ஆகியோரும் உடன் சென்றனர். முதலில் கெஜ்ரிவாலுக்கு ஆட்டோவில் செல்ல போலீசார் அனுமதி வழங்கவில்லை. பின்னர் கெஜ்ரிவால் போலீஸாருடன் பேசி அனுமதி அளிக்கப்பட்டதால் விக்ரம் வீட்டிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:அண்ணா நூற்றாண்டு நூலகம் நாட்டின் பெருமை... டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...

ABOUT THE AUTHOR

...view details