தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவின் பண்பாட்டுப் பெருமை உலகே வியந்து பார்க்கிறது - பிரதமர் மோடி - 12 அடி ஆதி சங்கரர் சிலை

கேதர்நாத்தில் நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி இந்தியாவின் பண்பாடு, வளர்ச்சி குறித்துப் பேசினார்.

Prime Minister
Prime Minister

By

Published : Nov 5, 2021, 3:55 PM IST

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் 12 அடி உயர ஆதி சங்கரர் சிலை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கிவைத்தார். பின்னர் அங்கிருந்த மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, "சில அனுபவங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கேதர்நாத் இறைவனிடம் திருவடியில் நான் உணரும் விஷயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலவில்லை.

2013ஆம் ஆண்டு வெள்ளத்தால் பெரும் சேதம் கண்ட கேதர்நாத், முன்னை விட சிறப்புடன் எழுந்து நிற்கிறது. இந்த புனரமைப்புத் திட்டங்களை ட்ரோன் கேமராக்கள் மூலமாக நான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தேன்.

நமது நாட்டின் பண்பாட்டுப் பெருமையை இன்று உலகமே வியந்துபார்க்கிறது. இன்று நாம் இலக்குகளை நிர்ணயித்து அதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்து பயணிக்கிறோம். இலக்கை அடையும் வரை நாம் ஓயப்போவதில்லை.

நமது இலக்குகள் உயர்ந்தவை. அடுத்த பத்து ஆண்டுகள் உத்தரகாண்டுக்கானது. கடந்த 100 ஆண்டுகளில் பெறாத முக்கியத்துவத்தை உத்தரகாண்ட் அடுத்த பத்தாண்டுகளில் பெறப்போகிறது" எனப் பேசினார்.

இதையும் படிங்க:உத்தரகாண்டில் 12 அடி உயர ஆதிசங்கரர் சிலை திறந்துவைத்த பிரதமர்

ABOUT THE AUTHOR

...view details