டேஹ்ராடூன் (உத்தரகாண்ட்): உலகப்புகழ்பெற்ற கேதார்நாத் சிவாலயத்தின் தேவஸ்தானத்தை கலைக்க வலியுறுத்தி, அக்கோயிலின் முன் அமர்ந்து அர்ச்சகர்கள் மூன்று நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரசித்திபெற்ற சிவலாயங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் ஆலயம், கேதார்நாத் சிவன் ஆலயம்.
சுற்றிலும் பனி படர்ந்து இமயமலை அடிவாரத்தில் பனி வடிவில், காட்சி தரும் லிங்கத்தைத் தரிசிக்க, இங்கு ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று(ஜுன் 13) கேதார்நாத் கோயிலின் முன் அமர்ந்து, மூன்றாவது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை இக்கோயிலில் பணிசெய்யும் அர்ச்சகர்கள் மேற்கொண்டனர்.
குறிப்பாக, தற்போது அமைக்கப்பட்டுள்ள 'சார் டாம் தேவஸ்தான வாரியத்தை' கொண்டு வந்தால், அர்ச்சகர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் என்றும், எனவே கட்டமைக்கப்பட்ட தேவஸ்தானத்தை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால், போராட்டம் இன்னும் தீவிரம் அடையும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் தீரத் சிங் ராவத், 'விரைவில் சார் டாம் தேவஸ்தானம் போர்டு விரைவில் மறுகட்டமைக்கப்படும்; சீரமைக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு: தொடரும் கட்டுப்பாடுகள்