உத்தரகாசி:உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத் கோயில் கதவுகளை மூடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டதாகக் கோயில் கமிட்டி தெரிவித்துள்ளது.
கடந்த மே 3 அன்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரியின் கதவுகள் திறக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான சார் தாம் யாத்திரை, வரும் நவம்பர் 19 அன்று மாலை 3:35 மணிக்கு மீன லக்கினத்தில் குளிர்காலத்திற்காக பத்ரிநாத் தானின் கதவுகள் மூடப்பட்டு முடிவு பெருகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி தானில் இதுவரை 1,110,006 பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். கங்கோத்ரி தானின் கதவுகள் இன்று மூடப்பட்டன, யமுனோத்ரியின் கதவுகள் நாளை மூடப்படும்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா நதிக்கரையில் பத்ரிநாத் தான் அமைந்துள்ளது. இந்த ஆண்டு பத்ரிநாத் தானின் கதவுகள் சார் தாம் யாத்திரைக்காக மே 8 அன்று திறக்கப்பட்டது. மேலும் அக்டோபர் 24 வரை 1,644,085 பக்தர்கள் பத்ரிநாத் தானுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி வரை பத்ரிநாத் - கேதார்நாத் தானுக்கு சென்ற மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 99 ஆயிரத்து ஆறு நூற்றி 28. இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி வரை நான்கு தான்களுக்கும் சென்ற யாத்ரீகர்களின் எண்ணிக்கை 4,309,634 ஆக இருந்தது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"கரன்சி நோட்டுகளில் கடவுள்கள் லட்சுமி-விநாயகர் உருவம் இருந்தால், நாடு செழிக்கும்" - கெஜ்ரிவால்!