தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விரைவில் ஹைதராபாத்தில் தலித் மாநாடு - தெலங்கானா முதலமைச்சர் அறிவிப்பு - BSR

பிஆர்எஸ் கட்சியின் கீழ் ஹைதராபாத்தில் விரைவில் தலித் மாநாட்டை நடத்த உள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஹைதராபாத்தில் தலித் மாநாடு - தெலங்கானா முதலமைச்சர் அறிவிப்பு
விரைவில் ஹைதராபாத்தில் தலித் மாநாடு - தெலங்கானா முதலமைச்சர் அறிவிப்பு

By

Published : Oct 7, 2022, 8:53 AM IST

ஹைதராபாத்:கடந்த புதன்கிழமை (அக் 5) தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தனது டிஆர்எஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார். அதில் ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என்ற தேசிய கட்சியைத் தொடங்க உள்ளதாக அறிவித்தார். இந்த கட்சியின் மூலம் பாஜக அரசுக்கு எதிரான தேர்தல் நடவடிக்கைகளை நடத்த உள்ளதாக அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தேசிய கட்சி அறிவிப்பின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் உடனிருந்தார். இந்த நிலையில், ‘நாடு முழுவதும் உள்ள தலித் சகோதரர்களுடன் இணைந்து பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கீழ் ஹைதராபாத்தில் விரைவில் தலித் மாநாடு நடத்தப்படும்.

மாநிலத்தில் (தெலங்கானா) தலித்துகளின் நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்துவது என்பது கட்டாயமான ஒன்று”என முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:‘பாரத் ராஷ்டிர சமிதி’ - புதிய தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் சந்திரசேகர ராவ்

ABOUT THE AUTHOR

...view details