தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தசரா நாளன்று தேசிய கட்சி தொடங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் கேசிஆர்?

அக்டோபர் 5ஆம் தேதி, டிஆர்எஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தை நடத்தி, அதில் தேசிய கட்சி தொடங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்ற, முதலமைச்சர் சந்திர சேகர ராவ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

KCR
KCR

By

Published : Sep 29, 2022, 8:55 PM IST

ஹைதராபாத்: 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தை அக்டோபர் 5ஆம் தேதி, தசரா திருவிழா அன்று நடத்த முதலமைச்சர் சந்திர சேகர ராவ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும், இதில் தேசிய கட்சி தொடங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு கேசிஆர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

கட்சிக்கு, பாரத ராஷ்டிர சமிதி, மேரா பாரத் மகான் உள்ளிட்ட பெயர்கள் பரீசிலனையில் உள்ளதாகவும், தற்போது டிஆர்எஸ் கட்சிக்கு உள்ள காரையே தொடர வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. தேசிய கட்சிக்கான கொடி இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் இந்தியாவின் வரைபடமும், இளஞ்சிவப்பு நிறமும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்சிக்கு தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெற்றதும், தெலங்கானாவிலோ அல்லது டெல்லியிலோ பிரம்மாண்டமாக பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் தங்களது கொள்கைகள் உள்ளிட்டவற்றை வெளியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்... விலகிய கெலாட்... சசி தரூர், திக் விஜய் சிங் வேட்புமனு தாக்கல்...

ABOUT THE AUTHOR

...view details