ஹைதராபாத்: 2022-23ஆம் நிதியாண்டிற்கான மத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கை குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் கடும் விமர்சனம் வைத்த தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவிற்கு (கேசிஆர்) டி.கே. அருணா பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 1) தாக்கல்செய்யப்பட்ட மத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கை குறித்து கேசிஆர் அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில், "பாஜக தலைமையிலான அரசை அகற்றி வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும்" எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
மேலும், அவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்தும் தாக்கிப் பேசினார்.