தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரிசி கொள்முதல் விவகாரம் - மத்திய அரசுக்கு 24 மணி நேரம் கெடு விதித்த சந்திரசேகர ராவ்! - தெலங்கானா முதலமைச்சர்

புழுங்கல் அரிசி கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடி 24 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கெடு விதித்துள்ளார்.

TRS
TRS

By

Published : Apr 11, 2022, 8:02 PM IST

தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் தற்போதைய பயிர் பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் புழுங்கல் அரிசியை முழுவதுமாக கொள்முதல் செய்யக்கோரி, மத்திய அரசுக்கு தெலங்கானா அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்ய முடியாது என்றும், நெல்லை மட்டுமே கொள்முதல் செய்வோம் என்றும் மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில், மத்திய அரசு மீண்டும் அவர்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இதனால், தெலங்கானா விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிக்கிறது எனக் குற்றம்சாட்டியும், தானியங்களை கொள்முதல் செய்வதில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று குற்றம்சாட்டியும், டெல்லியில் உள்ள தெலங்கானா பவனில், அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் ஒருநாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலங்கானா மாநில விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும், மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான கொள்முதல் முறையை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகெய்த், இப்போராட்டத்தில் கலந்து கொண்டு, ஆதரவு தெரிவித்தார்.

போராட்டத்தில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், "இந்தப் பருவத்தில் தெலங்கானா மாநில விவசாயிகளிடமிருந்து முழு நெல்லையும் கொள்முதல் செய்ய முடியுமா? முடியாதா? என்பதை, பிரதமர் நரேந்திர மோடி அரசு இன்னும் 24 மணி நேரத்தில் கூறியாக வேண்டும்'' என கெடு விதித்தார். ஒருவேளை மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்றால், நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

விவசாயிகளின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம் என்றும், அரசையே கவிழ்க்கும் வல்லமை விவசாயிகளுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார். விவசாயிகள் பிச்சைக்காரர்கள் இல்லை என்றும், தாங்கள் உற்பத்தி செய்த பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை கேட்பது அவர்களது உரிமை என்றும் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விமானத்தில் வாக்குவாதம்: வைரலாகும் ஸ்மிருதி இரானி வீடியோ

ABOUT THE AUTHOR

...view details