சோபியான்: ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள சவுத்ரிகுண்ட் கிராமத்தைச் சேர்ந்த பூரன் கிரிஷன் பட் என்ற காஷ்மீர் பண்டிட்டை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், பூரன் கிரிஷனை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொலை!
ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பூரன் கிரிஷன் பட் என்ற காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
kashmiri
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர், சம்பவம் நடந்த கிராமத்தை சுற்றி வளைத்து, தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். இதேபோல் அப்பகுதியில் கடந்த மாதம் காஷ்மீர் பண்டிட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இதுவரை மூன்று காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டுள்ளனர்.