ஸ்ரீநகர்(ஜம்மு காஷ்மீர்):ஐ.நா. பருவ நிலை மாற்றத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பருவ நிலை மாற்றம் குறித்த செய்தி சேகரிப்பில் திறம்பட பணியாற்றியதாக காஷ்மீரைச் சேர்ந்த செய்தியாளர் சாமன் லத்தீப் என்பவருக்கு ஐ.நா.வின் மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது.
நியூ யார்க்கில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்ரெஸ், விருதை வழங்கினார். ஐ.நா அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.
காஷ்மீரைச் சேர்ந்தவரான சமான் லத்தீப்புக்கு, வெண்கலப் பதக்கம், பணப் பரிசு, மொனாக்கோ இரண்டாம் இளவரசர் ஆல்பெர்ட் நினைவுப்பரிசு உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.