தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காசி கோயிலில் லிங்கத்தை தொட்டு வழிபட தடை

உலகம் முழுவதும் கரோனா பரவலை கருத்தில் கொண்டு, காசி விஸ்வநாதர் கோயிலில் டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை பக்தர்கள் சிவலிங்கத்தைத் தொட்டு வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

By

Published : Dec 30, 2022, 10:44 AM IST

Etv Bharatபுத்தாண்டில் காசி கோயிலில் லிங்கத்தை தொட்டு கும்பிட பக்தர்களுக்கு தடை
Etv Bharatபுத்தாண்டில் காசி கோயிலில் லிங்கத்தை தொட்டு கும்பிட பக்தர்களுக்கு தடை

வாரணாசி:உலகம் முழுவதும் மீண்டும் கரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் வழிபாடுகளில் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை 'ஸ்பர்ஷ் தரிசனம்' என்றழைக்கப்படும் பக்தர்கள் சிவலிங்கத்தை தொட்டு வழிபடும் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அதிகப்படியான பக்தர்கள் வருவார்கள். கரோனா பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவித்தனர். வாரணாசி கோட்டாட்சியர் கவுஷல் ராஜ் சர்மா கூறுகையில், "டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை 'ஸ்பர்ஷ் தரிசனம்' தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒத்திகையை டிசம்பர் 30ஆம் தேதி நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார். இந்தாண்டு புத்தாண்டில் ஏழு லட்சம் பக்தர்கள் ஸ்பர்ஷ் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Heeraben Modi: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details