பெங்களூரு: கர்நாடக மாநிலம் சாமராஜநகரில் போலீஸ் வாகனத்தில் இருந்து வெளியே குதித்து தப்பிக்க முயன்ற குற்றவாளி படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக மூன்று போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சாமராஜநகர் போலீசார் கூறுகையில், யாழந்தூர் தாலுக்காவில் உள்ள குந்துருமோல் கிராமத்தைச் சேர்ந்தவர் நிங்கராஜூ (21). இவர் மைனர் பெண்ணை கடத்திய வழக்கில் நவம்பர் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அப்போது போலீசார் அவரை வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் நோக்கி புறப்பட்டனர்.
கர்நாடகா: போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்த குற்றவாளி உயிரிழப்பு - Youth jumps jeep and die
கர்நாடகாவில் போலீஸ் வாகனத்தில் இருந்து வெளியே குதித்த குற்றவாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே நிங்கராஜூ தப்பிக்கும் எண்ணத்துடன் ஓடும் வாகனத்தில் இருந்து குதித்துள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் நிங்கராஜூவை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (நவம்பர் 30) உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக யாழந்தூர் போலீசார் சிவமடியா, மாதே கவுடா, சோமன்னா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நிங்கராஜூவின் தாய் மகாதேவம்மா தனது மகன் சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க:ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீயில் கருகி உயிரிழப்பு