டெல்லி:கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டம் பாலேனஹள்ளி கேட் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஆகஸ்ட் 25) சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் நடந்த விபத்து நெஞ்சை உருக்குகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.