கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் உள்ள பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் சட்டவிரோதமான செயல்களுக்காக நிதியுதவி திரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அம்மாநில காவல்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது.
கர்நாடகாவில் பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கைது - PFI SDPI
கர்நாடகாவில் நடத்தப்பட்ட சோதனையில் பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கைது
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அலோக் குமார் மேற்பார்வையில் மாவட்டந்தோறும் எஸ்பி தலைமையில் நடைபெற்ற சோதனையில் இதுவரை 40க்கும் மேற்பட்ட பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் பின்னணி என்ன? - முழு விவரம்
Last Updated : Sep 27, 2022, 8:50 AM IST