தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவாகரத்து தர மறுத்த மனைவியின் குடும்பத்திற்கு தீ வைத்த கணவன் - இருவர் பலி - கோடெகல் அருகில் உள்ள நாராயாணபுரா

கர்நாடகாவில் விவாகரத்து தர மறுத்த மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை அறையில் வைத்து கணவன் தீ வைத்ததில் இருவர் உயிரிழந்தனர்.

விவகாரத்து தர மறுத்த மனைவியின் குடும்பத்திற்கு கணவன் தீ- இருவர் பலி
விவகாரத்து தர மறுத்த மனைவியின் குடும்பத்திற்கு கணவன் தீ- இருவர் பலி

By

Published : Jun 30, 2022, 7:20 AM IST

கர்நாடகா:கர்நாடக மாநிலத்தில் விவகாரத்து தர மறுத்த மனைவியை அவரது குடும்பத்துடன் தீ வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்தனர். இருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கோடெகல் அருகில் உள்ள நாராயாணபுரா என்ற கிராமத்தில் நடந்துள்ளது.

சரணப்பா அவரது மனைவி ஹூலிகெம்மாவிடம் நீண்ட நாட்களாக விவகாரத்து தருமாறு மிரட்டி வந்துள்ளார். ஹூலிகெம்மா அவரது கனவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் அருகிலுள்ள KSRTC டிப்போவில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 14 மாதங்களாக கணவனை பிரிந்து லிங்காசுகுரு என்ற இடத்தில் வசித்து வந்தார்.

இது குறித்து காவல்துறையினர் அளித்த தகவலின் படி, சரணப்பா நேற்று(ஜூன்29) அவரது மாமனார் மற்றும் உறவினர்களை அவரது மனைவியுடன் சமாதானம் பேசுமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து அவர்கள் விவகாரத்து தர மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சரணப்பா, அவர்களை ஒரு அறையில் வைத்து வெளிபக்கம் இருந்து பூட்டி தீ வைத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் காயமடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் நாகப்பா மற்றும் ஷரன்ப்பா ஆகியோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து எஸ்பி. வேடமூர்ததி கூறுகையில், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இதையும் படிங்க:இரண்டு பெண்களுக்கு பாலியல் தொந்தரவு - புகார் பதிவு செய்யாமல் சமரசம் பேசிய காவல்துறை - அதிர்ச்சி சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details